Posts
அஷ்ஷேக் நிஹார் அப்துல்லாஹ் (அல் அப்பாஸி) அவர்களின் அரபு மொழி கற்றலுக்கான திறந்த வலைத்தளம்.
ازرع بقلبك أشخاص يشبهون الياسمين
- Get link
- X
- Other Apps
மல்லிகைப் பூவைப் போன்றவர்களை உங்கள் இதயங்களில் விதையுங்கள். மல்லிகைக்கு முட்களில்லை. ஆதலால், அது யாருக்கும் தீங்கு செய்வதில்லை. விதிவிலக்கின்றி எல்லா மக்களுக்கும் அதன் நறுமணத்தை அது அள்ளி வழங்குகிறது. மல்லிகைச் செடிகளைத் தேடி யாரும் சிரமப்பட வேண்டியவதுமில்லை. ஏனெனில், அதன் வாசனையும் நறுமணமும் அது இருப்பதை உடனே காட்டிக் கொடுத்து விடும். ஆக, நீங்களும் உங்களின் நல்ல அணுகுமுறையினாலும் நற்செயல்களாலும், நற்குணத்தாலும் மக்கள் மத்தியில் மல்லிகைச் செடிகள் போல் வாழ்ந்து காட்டுங்கள். ازرع بقلبك أشخاص يشبهون الياسمين. فالياسمين لاشوك له يهدي عبيره لكل الناس بدون استثناء يقولون إن أشجار الياسمين لا تتعب أحداً في البحث عنها لأن عبيرها وعطرها يدل عليها ،كذلك بعض البشر يعرفهم الناس بما يفوح من عظمة مواقفهم وطيب أفعالهم وجميل عباراتهم. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
கடுமையான சுற்றி வளைப்பு, சீனியை சிற்றறும்பு சுற்றி வளைப்பது போல என்ற கருத்தை தரும் சொற்றொடர்கள்
- Get link
- X
- Other Apps
تعابير شائعة. பரவலான பாவனைகள்/ common expressions. * أحاط ...به....إحاطة السوار بالمعصم. * أحاط........به إحاطة القيد بالمعصم * أحاط.... به......إحاطة الهالة بالقمر. * أحاط.....به...... إحاطة الثمار بالأكمام. கடுமையான சுற்றி வளைப்பு, சீனியை சிற்றறும்பு சுற்றி வளைப்பது போல. Encirclement, encompassment, enclose, to ring, close in from all sides بالمثال يوضح المقال، உதாரணமாக, 🍒 للأسف، نرى الإرهاب اليوم قد أحاط بدمشق إحاطة القيد بالمعصم. துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதம் சிரியாவின் தலைநகராகிய டமஸ்கஸ் மாநகரை முற்றிலும் சூழ்ந்திருப்பதை தற்போது எம்மால் காண முடிகிறது. 🍒 أحاط الجيش الإسلامي بساحة المعركة إحاطة القيد بالمعصم. சீனியை சிற்றெறும்பு சுற்றி வளைப்பது போல் போர்க்களத்தை இஸ்லாமியப் படை சுற்றி வளைத்தது. 🍒 أحاط المسلمون بعَدوّهم إحاطة السوار بالمعصم ونفذوا إلى صفوفهم. முஸ்லீம்கள் தம் எதிரிகளை முழுமையாக சுற்றி வளைத்து, அவர்களின் அணிகளுக்குள் ஊடுருவி இருந்தனர். 🍒 أحاط كفار قريش بحجرة النبي صلى الله عليه وسلم في ليلة الهجرة إحاطة السوار بالمعصم. புலம்பெயர் இரவில் சீனியை...
المُغادرة الصامتة هي الرّد العظيم
- Get link
- X
- Other Apps
உங்கள் இரக்க சுபாவத்தை குறைத்து மதிப்பிடும் ஒவ்வொருவருக்கும் உங்கள் மௌனம் மட்டுமே சிறந்த பதிலாக அமையும். المُغادرة الصامتة هي الرّد العظيم لكُل من إستهان بطيبة قلبك. The silent departure is the great response of everyone who underestimated the kindness of your heart. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
أصحآب القلوب النقية
- Get link
- X
- Other Apps
தூய்மையான உள்ளம் கொண்டவர்களை விட அழகானவர்கள் இந்த உலகில் எவருமில்லை. தூரம் நீண்டிருந்தாலும், பாதைகள் வேறுபட்டிருந்தாலும், அவர்களின் அழகான உரையாடல்கள் நம் மனதில் மகிழ்ச்சியை என்றும் மலரச் செய்து கொண்டே இருக்கும். لـآ شيئ أجمَــل من أصحآب القلوب النقية حتىٰ لـو طَــآل البعـد واختلفت الدروب تبقىٰ أحآديثهم تبث السعَـــآدة فينَـا. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
كان واثقاً بنفسك
- Get link
- X
- Other Apps
உங்கள் இதயத்தைப் பின்பற்றுமளவுக்கு நீங்கள் தைரியமாகவும், உங்கள் மனதை நம்புமளவுக்கு நீங்கள் புத்திசாலியாகவும் இருந்தால் மட்டுமே, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு வண்ணமானதாக அமையும். لن تكون الحياة رائعة إلا إذا كنت جرّيئًا بما يكفي لتتبّع قلبك ، وذكيًا بما يكفي لتثق بتفكيرك. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
"العفو" واحة خضراء
- Get link
- X
- Other Apps
"மன்னிப்பு" என்பது பிரச்சனைகள் எனும் பரந்த பாலைவனத்தின் மத்தியில் ரம்யமாக காட்சி தரும் ஒரு பசுமையான சோலை நிலம் போன்றது என்பதை என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்தது. அங்குதான் அன்பின் ரோஜாக்களும், அமைதியின் போதிமரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. ஏன்! மக்களிடையே பாசத்தின் கயிறுகளும் அங்குதான் பின்னப்படுகின்றன. علمتني الحياة أن "العفو" واحة خضراء وسط صحراء المشكلات القاحلة. وواحة تزهر داخلها ورود المحبة وأشجار السلام وتنسج خيوط المودة بين البشر. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
الحزن لا يجدد قديماً
- Get link
- X
- Other Apps
துக்கம் அனுஷ்டிப்பது ஒருபோதும் பழையதைப் புதுப்பித்து விடாது. அது கடந்த காலத்தையும் மீட்டிக் கொண்டு வராது. இழந்ததையும் திருப்பித் தராது. இதை நன்கு அறிந்தவர்களே உண்மையில் இந்த உலகில் மகிழ்ச்சியான மனிதர்கள். இவர்கள் தம் கவலைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு புன்னகையில் எப்போதும் வலம் வருவர். السعداء هم أشخاص عرفوا أن الحزن لا يجدد قديماً ولا يُعيد ماضياً ولا يرد غائباً فتركوه جانباً وابتسموا. ✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
வாய்ப்புள்ளது, சாத்தியப்பாடு உள்ளது என்ற கருத்தை தரும் சொற்றொடர்கள்
- Get link
- X
- Other Apps
📓 بسم الله الرحمن الرحيم 📓 🌷 المورد العذب للعربية - سلسلة من الدروس العربية للمعلمين وطلاب العلم وخريجي المدارس العربية🌷 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 ⬇ موضوع الدرس ⬇ مهارة في التعبير والإنشاء. (الدرس الثاني والسبعون بعد المائة) ⏭⏮⏭⏮⏭⏮⏭⏮⏭⏮ 🎙🎙🎙🎙 🎓 المدرس الشيخ أبو سعاد محمد نهار بن عبد الله العباسي - خريج جامعة القصيم بالسعودية. 🎤🎤🎤🎤 تعابير شائعة. பரவலான அறபுப் பாவனைகள். * من المرجح أن....... * من الأرجح أن........ * أصبح من المرجح أن.... வாய்ப்புள்ளது, சாத்தியப்பாடு உள்ளது it seems possible that, it is likely to.... بالمثال يتضح المقال، எடுத்துக்காட்டாக; ١. من المرجح أن تجري محادثات سِلمية بين الرئيسين. இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற வாய்ப்புள்ளது. ٢. أصبح من المرجح أن تجري الانتخابات في بداية الشهر المقبل. எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் தேர்தல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ٣. من المرجح أن تجري كوريا الشمالية اختباراً نووياً قبل زيارة بايدن المقررة خلال الشهر الج...