About us
எம்மைப்பற்றி.....
"மதுர நீரோடை" எனும் இவ்வலை தளமானது, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள், அரபு மொழியை இலகுவில் கற்றுக் கொள்ளும் நன்நோக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய வலைத்தளமாகும்.மதிப்பிற்குரிய உஸ்தாத் அபூ சுஆத் முஹம்மத் நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி அவர்கள் மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது.
இலக்கு : தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறபு மொழியை கற்போருக்கும் கற்பிப்போருக்கும் முடிந்த வரை கைகொடுத்தப்பதன் மூலம் அவர்களை சுய கற்றலுக்கு உந்துதல்.
பணிக்கூற்று : பல விதங்களில் அறபு மொழிப் பாடங்களை முறையாகத் தொகுத்து வழங்குவதன் மூலமும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறபு மொழிப் பாடங்களை இயன்றவரை சரியாக மொழியாக்கம் செய்வதன் மூலமும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான அரிய பல வழிகாட்டல்களை வழங்குவதன் மூலமும், அறபு மொழிக் கற்கையை இலகு படுத்தும் சிறந்த வலைத்தளமாக விளங்குதல்.
நோக்கங்கள் :
1. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறபு மொழியை கற்கும் மாணவர்களுக்கும், அதை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உதவுதல்.
2. அல் குர்ஆனையும் நபிகளாரின் சுன்னாவையும் புரிந்து கொள்வதற்கு, அரபு மொழியை முறையாகக் கற்க வழி செய்தல்.
3. பல்வேறு கோணங்களில் அறபு மொழியை அணுகுவதன் மூலம் இம்மொழியின் இரகசியங்களை மாணவர்களுக்கு வெளிக் காட்டுதல்.
4. பல்வேறு தலைப்புகளில் அறபு மொழிப் பாடங்களை இங்கு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உலகில் அறபு மொழிக் கற்கையில் புதிய திருப்பங்களை தோற்றுவித்தல்.
5. கொள்கைகள், இயக்கங்கள், மத்ஹப் பிரிவினைகள், அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கு அப்பால் நின்று, பரிசுத்த வேதமாகிய அல்குர்ஆனின் மொழிக்கு சேவை செய்தல்.
எமது போக்கு : துறைசார் வல்லுனர்கள் சரியெனக் கண்ட, செம்மையான, தூய அறபு மொழியை மட்டுமே இங்கு நாம் பிரயோகிப்போம். ஆக, இன்று பரவலாக காணப்படும் இலக்கண விதிகளுக்கு மாற்றமான மொழி வழக்காறுகளை இயன்றவரை தவிர்க்கிறோம். புனித மாமறையின் மொழிக்கு தொண்டு செய்தல் எனும் உயர் இலக்குடன் இயன்றவரை களமிறங்கி செயற்படுகிறோம். அந்த வகையில், பிறரை ஏசுவதிலோ, திட்டுவதிலோ, வஞ்சிப்பதிலோ நாம் ஈடுபடுவதில்லை. மேலும் பயங்கரவாத சிந்தனைகளுக்கு இடமளிக்கும் விதமாகவோ அல்லது அதை ஊக்குவிக்கும் வகையிலோ எப்பதிவும் இங்கு இடம் பெறாது என்றும் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.
இறைவா ! அரபு மொழிக்கான எமது இம்மகத்தான பணியை நீ ஏற்று, அருள்புரிவாயாக...
Comments
Post a Comment